Saturday, November 7, 2009

பெருவெளி... (தொடக்கக் குறிப்பு 01)


இந்த உலகில் மனித ஆத்மாக்களாய் உயிர்ப்புடன் வாழும் உயிர்களுக்கெல்லாம் இறைவனின் சாந்தியும் அன்பும் நிலைபெற வேண்டுகிறேன்.

மனிதமும், மனிதனின் சிந்தனை எனும் பெருவெளியும், நம் கனவுகளும், கனவுகளோடு சண்டை பிடிக்கும் வாழ்வின் நிஜங்களும், அன்பின் எல்லையில்லா ரணங்களும், நாம் பயணம் பெய்யும் தொலைவுகளும் என்று, நான் உணர்ந்தவைகளை பகிர்ந்து கொள்வது என் எண்ணம்.

இந்த மரம் சினைப்பட்டு உயிர்ப்புடன் வாழும் காலமும், பெருமரமாய் வளர்ந்து நிற்கும் இடமும், வேர்களாய் மண்ணுள் புதைந்து கிடக்கும் ஈரமும் நான் எனச்சொல்வேன்.

சருகுகளாயும், செந்தளல் திண்ணும் விறகுகளாயும் மண்ணோடு மண்ணாய் மக்கிப் போவது திண்ணம். இதன் நம்பிக்கை ஒன்றே ஒன்றுதான், என் மரத்தின் பூக்கள் சினைப்பட காற்றில் நீ ஓதும் உயிர்ச் சொல்லால் எங்கோ ஒரு தொலைவினிலே மீண்டும் முளைத்தெழுவேன் அறிவாயா நீ!

-yousuf salman-

1 comment:

  1. தெரடர்ந்தும் பகிர்ந்து கொண்டிருங்கள். பெருவெளியெங்கும் பரவும் உங்கள் பூக்களின் சினைகளுடனான புணர்தலுக்காய் என் சொற்களும் காத்திருக்கும்.

    ReplyDelete

Please add your commends