Wednesday, December 9, 2009

முகம் புதைத்து அழுத, அத்தருணம்

காரிருள் முழுவதுமாய்
மூடிய அறையினுள்ளே
மெல்லிய
மிக மெல்லிய
ஒளி பறவிக்கிடக்கிறது

அத்தருணம்
தலையணை முகம் புதைத்து
அழுது தொலைகிறேன்
நான்

பறவிக்கிடக்கும் இருள்போலும்
மனம் முழுதும் ஆழப் புதைந்து கிடக்கிறது
இருள்

வாழ்வின்
வடிவங்கள்
அல்ல
படிமங்களில்
தொற்று நிக்கும் சோகம்
என்னவென்றே புரியவில்லை
பார்!

வாழ்வின்
எல்லா கொப்புகளில்
தவிப்புகளும்
ஏக்கங்களும்
நிமிடங்களின்
இறுதி விணாடிகளிலும்
தொடர்கிறதுதாம்
பார்!

வாழ்வின்
ரணப்போழுதுகள்
என்பதை தவிர்த்து
எதனையும் சொல்ல இயலவில்லை
என்னால்.

-yousuf salman-
Time 02:30AM

Tuesday, November 17, 2009

கவிதை பற்றிய என் குறிப்பேட்டில் (தொடக்கக் குறிப்பு 02)

என் அந்திம காலத்தின், ஆற்றாமை கனவுகளில், சோகமாய் தேங்கிநின்ற தருணங்களில் எழுதப்பட்டவைகள்தாம் இவைகள். இவை மிகச்சிறந்த எழுத்துருவாக்கம் என்பதெல்லாம் பொய். ஆனால் அந்திமகாலத்தின் வலிகள் ஒவ்வொன்றையும் எழுத்துருவாக்கம் செய்ததின் வினை. அந்த தருணத்தில் எழுதப்பட்டவைகளை எதுவித திருத்தமும் செய்யாமல் உள்ளது உள்ளபடியே தந்திருக்கிறேன். குழந்தையின் நிர்வாணம் காமத்துக்குறியவையல்ல. கல்கொண்டு வீசியடிக்க.

அன்று நான் கிராமம் சார்ந்த நகரத்தில், மண்தின்று மழைநீர் பருகியவன்தான் மறுப்பதற்கில்லை. இன்று உடல் மூடிக்கிடந்தாலும், மனம் நிர்வாணமாய் கிடக்க வேண்டியும் தோற்றுத்தான் போகிறேன்.

உயிர் எழுத்துக்கள்

வாழ்கையின் அதிர்வுகளை
உணரும் பொழுதுகளல்
வாழ்கிறேன் நான்

இதயக் கருவறைக்குள்
உயிரின் வலியினை
உணர்கிறேன்

உயிர் எழுத்துக்களை
என் ஆண்மா
மென்று துப்பிற்று

பிரிவின் துயர்
ஏக்கங்கள் இடையே
போராட்டத்தின் மைல் கற்களையும்
பச்சை புல்வெளிகளையும்
தேடி அலைகிறேன்

விழி மூடா சோகம்
இமை மூடியபின்னும் தொடர்கிறது

வசந்த காலங்களில்கூட
சாவின் ஓலங்களை கேட்டிருக்கிறேன்
இன்னும் ஓயவில்லை

தொடக்கமோ முடிவோ
என்னால் முடியவே இல்லை
வாழ்வோ மரணமோ
என்னால் இயலவே இல்லை

-yousuf salman-
12/sep/2007

Monday, November 16, 2009

என் காலடியில் கிடந்தழும் நீ!

உன் ஆண்மா
உன் இருப்புவிட்டு
என் காலடியில் கிடந்தழும்

அப்போது
என்னுள்ளும்
ஒரு தீ பற்றிக் கொல்லும்

ஆண்பிள்ளை
எனும் போதையும்
நீ ஒரு கோழை
எனும் பெண்மையும்
தலைக்குள் கொட்டும்

உன் பற்றிய கனவுகள்
நிர்வாணத்தில் கழியும்

அப்போது
உன் ஆண்மா
உன் இருப்புவிட்டு
என் காலடியில் கிடந்தழும்

தீ(நீ) எரிதலில்
என் ஆண்மா
கருகுவதும் மெய்தான்

இங்கே
மெய் என்பதெல்லாம் நானேதான்

தீ(நீ) கருகுவதால் மெய் அழியுமா என்ன?

நீ
உன்
உடல்
விற்றுப் பிழைத்துக் கொள்

அல்ல
உன் உடல் போல்
ஓர் உடலோடு படுத்துக்கொள்

-yousuf salman-

Sunday, November 15, 2009

இருண்மை

அலைக்கழியும் மனத்தின் வெளிப்பாடுகளும், அதன் கலையின் வெளிப்பாடுகளும் வாழ்வின் மீதான கசப்பான உணர்வுகளையும், தோற்றங்களையும் கொண்டிருக்கும். எம்வாழ்வு தொலைத்து நிற்கும் வாழ்வின் எதிர்பார்புகள் எல்லாம், வெறும் வெத்துக்கனா என்று இறந்தகாலம் நம்மில் சேறு பூசிவிட்டுச் செல்லும். நம்பிக்கையின் நீளம் மிகக் குருகியதாயும், நம்பிக்கையால் நாம் நிறப்பிய உயிர் கோப்பைகலிலெல்லாம் ரத்தம் கசிவதாயும், மனம் சொல்லிக்கொண்டே இருக்கும். எண்ணுள் ஊடாடும் உயிரின் வலியினை என் ஆண்மா பற்றிநிக்கிறது அவ்வளவே!..

இருண்மை

தனிமையில் ஒரு மழை இரவு
தனி அறையில் நான் என் ஆண்மாவோடு
ஆண்மா மழையின் சாரல்வெளியில்
நனைந்துருகி கசிகிறது

நீலம் கவிந்த இருள்
ஈரம் சொட்டச் சொட்ட அங்கே நிலவு
நிலவும் மழைநாள் இரவும் கொள்ளை அழகு

தார் ஊற்றிய பாதைவெளி
உஷ்ணம் புகையாய் வெளிக்கிளர
பாதைவெளி மஞ்சல் ஒளியும், உஷ்ணப்புகையும்
இரவின்அழகு

நெங்சில் அலையென ஒரு பெருங்காற்று
அதுவரைந்த வலிகள் மிகக்கொடுமையாய்
என்னுள் இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறது
உயிரின் வலி

மூச்சுக்காற்றில் சூடேற
மனம் கனமான மெல்லிய இருள்களினூடே
தனிமையில் அலைகிறேன்

நினைவுகள் எரித்த இரவின் மிரட்ச்சி
என்னுள் எழும் கேள்விகளோடு
வண்மமான கொடூரம் நிகளும்
இந்த இரவின் நிமிடங்களில் நசுங்கி
இரவோடு எரியலானேன்...

-yousuf salman-

Saturday, November 14, 2009

நீயும், நிறங்கள் போர்த்திய உலகும் (கனவு, நேற்றும் நாளையும்)

"அதென்ன நிறங்கள்? வாழ்வின் எல்லா நிமிடங்களுக்கும், வாழ்வின் எல்லா உணர்தலுக்கும் ஏதோவொரு வடிவம் அல்லது உருவம் இருக்கும். அவைதாம் கவிதையாகவோ, ஓவியமாகவோ, ஒளியில் விம்பமாகவோ காலத்தில் வெளிக்கிளறுகிறது. அவ்வகையான உருவங்களுக்கு என்னால் கொடுக்கப்பட்ட படிமம் அல்லது குறியீடுதான் நிறம்"

இடம், காலம், பொருள் என்ற கட்டுக்குள் சிக்காத பள்ளிப்பருவத்தில் சக மாணவியுடன் கிறுக்கிக் கொள்ளும் விசர்தனத்தில் தொடங்கி, வேலைத்தளத்தில் “செம்ம பிகர்" வரையிலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது நம் காதல் பற்றிய கனவு. அவள் இல்லாத நானும், நான் இல்லாத அவளும் என்று தொடங்கும் காம அல்லது காவியக் காதல்கள், கடல்மனலில் வீடு கட்டி, நிலா வெளியில் முத்தம் இட்டு, பூக்களோடும் அவள் கண்களோடும் கனவுகளில் பெரும்பாலும் கதைபேசி முடிந்திருக்கும். நான் ஒரு நடிகன் என்றும், பெண்களை கவுக்கும் “மைனர் குஞ்சு" என்றும், ஞானி என்றும் விஞ்ஞானக் குருவி என்றும் மரத்திற்கு மரம் கூடு கட்டி பறந்து கொண்டே இருக்கும் இந்தப் பொல்லாத கனவு.

கனவு என்பது மனித மனத்தின் சிருபராயம் முதலே தொடங்கிவிடுகிறது என்றாலும் மனித மனத்தில் கனவு எப்போது தொடங்கிற்று? நாம் முதன் முதலில் கண்ட கனவு என்ன? எப்போது? எதைப்பற்றி? யாருக்காவது ஞாபகம் உள்ளதா? கனவு பற்றி சிக்மன் ஃபிறாய்ட் சொல்வதை கேளுங்கள்!

"கனவில் நம்மை வியக்க வைத்த பல செயல்பாடுகள் நம் ஆழ்மனதினுடையவே என்று இப்போது தெரியவருகிறது. ஆழ்மனதைப் பற்றிய உண்மையை அறிய வந்ததினால்தான், கடந்த காலத்தில், அதை அறிவதற்குமுன், கனவுகள் ஏற்படுத்திய பூதாகாரமான பிரச்சனைகள் இப்போது ஒரு பிரச்சனையாகவே இல்லை. நமது தூக்க நிலையில் மட்டுமின்றி, விழிப்பு நிலையிலும் ஆழ்மனமானது இயங்கிக்கொண்டேதான் உள்ளது"

"விழிப்பு நிலையில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், கவலைகள், அனுமதிக்கப்படாமல் ஆழ்மனதிற்குள் தள்ளப்பட்ட, அமுக்கப்பட்ட விஷயங்கள் - இவை யாவும் நமது தூக்க நிலையின் சிந்தனைகளாகி, கனவுகளாகப் பரிணமிக்கின்றன"

"எனவே கனவுகள் என்பவை நமது (அமுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட) விருப்பங்களை (மாறுவேஷத்தில்) நிறைவேற்றுபவை என்று கூறலாம்"

என்ற தனது கனவுகளின் விளக்கம் (The Interpretation of Dreams) எனும் நூலை முடிப்பதற்கு முன் ஃபிறாய்ட், "கனவுகள் வருன்காலத்தை அறிவிக்கின்றன என்று பழங்காலத்தில் நம்பப்பட்டது. அந்த நம்பிக்கையில் உண்மையே இல்லை என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது" என்று இறுதியாக சொல்கிறார்.

கனவு காணுங்கள்!

ஆம்! கனவு காணுங்கள்!!

'எல்லாருக்குமே கனவு காண உரிமை உள்ளது. எனவே பெரிய பெரிய கனவுகளை காணுங்கள்'

'கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல...

உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே இலட்சியக் கனவு..

ஆம்! கனவு காணுங்கள்!!

முன்னாள் இந்தியகுடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் (Dr. Avul Pakir Jainulabdeen Abdul Kalam) அவர்களை நம் எல்லோருக்குமே ஞாபகப்படுத்தும் வசனங்கள்தான் இவை. சராசரி இந்திய குடிமகனின் இதயங்களிலெல்லாம் 'இந்தியா வல்லரசு' எனும் கனவினை தோற்றுவித்த வசனங்களே இவைதாம் என்றுகூட சொல்லலாம்.

நிறங்கள் போர்த்திய உலகும்

சரி! “பெரிய பெரிய கனவுகள்தான் பெரிய பெரிய இலட்சியங்களை உருவாக்கும்” என்பது மெய்தான் என்றாலும், கனவுகளுக்கும் எல்லைகள் உண்டா! என்பது பற்றி எண்ணினால் சில மறைக்கப்பட்ட, சொல்லப்படாத, கனவுகளின் மயக்கங்களில் நாட்களைத் தொலைத்த உண்மைகள் வெளியாகும். இந்த உண்மைகள் எதைப்பற்றி நமக்கு சொல்கிறது? உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான புரிதல் பற்றியா? அல்லது வாழ்வின் யதார்தம் பற்றியா?

பள்ளிப்பராயத்தின் இறுதி வருடங்களில், மனம் பிரபஞ்ச எல்லைகள் தாண்டி பயணிக்க நினைக்கும் பொழுதுகளில், தானொரு பொறியியல் வல்லுனர் என்றும், முகாமைத்துவ கணக்காய்வாளன் என்றும், மருத்துவன் என்றும், புனிதமான கலைகளை சமூக அரசியல் பொறிகளை உருவாக்கும் மாமனிதன் என்றும், தன்னைப் பற்றிய நல்ல கனவுகளில் மனம் சஞ்சரிக்கும். அல்லது நேர் மறை ஈர்புகளில் அதாவது காதல் பற்றிய பிரக்ஞையிலும், நட்பென்ற சந்தோஷ புதினங்களிலும் பள்ளிப்பருவ இறுதி வருடங்கள் கனவுகளிலே கழிந்திருக்கும். பள்ளிப்பருவம் முடிந்த சில வருடங்கள் கழித்து பெரும்பாலானவர்களின் வாழ்வின் எதிர்பார்புகள், கனவுகளால் கட்டப்பட்ட கோட்டைகள், இடம்தெரியாத முகவரியாய் மாறி இருக்கும். வாழ்வின் எதிர்பார்புகள், நம்பிக்கைகள் எல்லாம், வெறும் வெத்துக்கனா என்று இறந்தகாலம் நம்மில் சேறு பூசிவிட்டுச் சென்றிருக்கும். கனவு பற்றிய உண்மைகளை, வாழ்வு பற்றிய தெழிவுகளை தேடி அலைகிற இடம் இங்குதான தொடங்குகிறது.

பள்ளி செல்லும் மாணவன் தன் அழகான வாழ்வு பற்றி கனவு கான்பான் என்பது போல், பள்ளி செல்ல வசதி அல்லாத தெருவோரம் அலைந்து திரியும் அனாதை சிருவன், தன் வாழ்வின் என்றோ ஒருநாள் அனுபவித்த இன்னுமொரு தீராப் பொழுது பற்றியேதான் கனவு கான்பான். தெருவோர அனாதைப் பயல்கள் தவிர்த்து நம்மில் பெரும்பாலுமே எல்லோருக்கும் வாழ்வின் உயர்நிலையை அடைவதற்கான எல்லாமும் உண்டு, ஆனாலும் தோழ்விகள் வருகின்றன, நம் கனவுகளோடு சண்டை பிடித்த ஞாபகங்கள் வந்துபோகின்றன.

கனவு கானுங்கள் ஆனால் அதனை அடைந்து கொள்வதற்காக விடாமல் கடுமையாக போராடுங்கள். நம் இயலுமை பற்றிய பிரக்ஞையில் இருந்து விடுபட்டு நனவு நிலைக்கு திரும்புங்கள், யதார்த்தத்தை சரியாய் புரிந்துகொள்ளுங்கள், தன் ஆழுமையை விடாமல் விருத்தி செய்யுங்கள், அதன் பின் கனவு காணுங்கள், ஒரு பெரிய வெற்றி பற்றி, ஓரு அழகான காதல் பற்றி, அந்தி மாலை வெய்யில் பற்றி, காலையின் குளிர்பனி பற்றி, தெருவொர அனாதைப் பயல்களின் செழுமையான வாழ்வு பற்றி.

எல்லா மனிதனும் தன் வாழ்நிலைகளின் உயர்வு பற்றியதான கனவுகளில்தான் வாழ்கிறான், அவன் காண்கிற கனவு அவன் இலக்குகளை நிர்ணயம் செய்கிறது, தன் விழிப்பு நிலையை அவனுக்கு பிறகடனம் செய்கிறது, இன்னும் போறாடத் தூண்டுகிறது, இன்னும் அதிகமாய் கனவு காணச் சொல்கிறது.

இங்கே எல்லாமும் இருக்கிறது; ஆனால் ஏதோவொன்று குறைகிறது. எதுவுமெ இல்லை; ஆனாலும் ஏதோவொன்று இருக்கிறது. இவ்வாறே கழிகிறது வாழ்கை பற்றிய நம் கனவு. பின்னாளில் கனவு கண்டுகொன்டே நாட்கள் கழிந்திருக்கும், ஆதலால் கனவு காணுங்கள்.

-yousuf salman-

Tuesday, November 10, 2009

தீராத வாழ்வின் வலி...


"தீரா வலிகொண்டலைந்த நாட்கள் எல்லாம் பொய்யோ மெய்யோ அல்ல அது ஒரு மாயை, அவனவன் பார்வைக் கோளத்தின் எதிர்வினை"

உயிரின் நினைவுகளில் நசுங்கி வாழும் ஓரு மாற்றான் தேச பறவை நான். என் ஆற்றாமை கனவுகளில் தொற்றி நிற்கும் சோகம் ஒரு வண்மமான கற்பழிப்பு. வெப்பிசாரம் கொல்லும் இரவில் மனம். மனிதப்பிண்டமாய் இங்கே அலைகிறேன் நான். என்னையும் என் ஆண்மாவையும் பற்றி நிற்கும் சோகம், ஒரு ஈரம் செறிந்த பின்மாலை வெய்யில் போல் அழுது கரைந்து கொண்டிருக்கிறது.

மனம் எதிலும் லயிப்பற்று, சஞ்சார வெளியின் எல்லா கொப்புகளிலும் பிடிப்பற்ற தருணங்கள் இப்போதும் உள்ளது. என்னிடம் இருப்பது அவ்வளவே என்றாலும், நம்பிக்கைகள் காற்றின் ஈரம் போலும், மூச்சின் வெப்பிசாரம் போலும் என்னுள் எழுந்து கொண்டுதான் உள்ளது. அப்போதெல்லாம் இந்த வாழ்வு உண்மையென்றும் இதுதான் வாழ்வு என்றும் மனம் மீண்டும் சொல்கிறது. நம்பிக்கை எழும் தருணங்கள் காட்டுத் தீ போலும், உடல் முழுதும் பறவிப் பிடிக்கிறது தீ. இப்படியேதான் என்வாழ்வு இனிக்கழியும் என்று நம்பிக்கை எனக்குச் சொல்லிற்று.

அவள் என்னை அடித்து திட்டித் தீர்ந்த தருணங்கள் என் நினைவுகளில் இன்னும் உள்ளது, அந்த தருணங்களுக்காய் இன்னுமொரு முறை பிறக்கலாம், அவள் மகனாய்த்தான் பிறக்க வேண்டும். அவள்தான் என் தாய். அவள் மடிசாய்ந்து தூக்கம் தொலைந்தோட அவள் அரவனைப்பிலும் ஸ்பரிசத்திலும் மரணம்வரை படுத்துக்கிடக்க வேண்டும். இந்த உலகிலேயே மிகச்சிறந்த சமையல்காரி. அன்பில் ரணமாய்க் கொல்லும் கொலைகாரி. எனக்கு அவள் அன்பைவிட அதிகமாய் அவள் என்னைப் பற்றி சொல்லும் பொய்கள் பிடிக்கும். நேற்றும் என் கனவில் வந்தால், ஏதோவொன்றுக்காய் என்னை அடித்தாள், பின் அவள் மடியில் எனைப் புதைத்து தலை
கோதிநாள், நான் தூங்கிக் கிடந்தேன் அப்போது.

அவர் பற்றியும் சொல்லியாக வேண்டும். அவரை நான் அப்படித்தான் அழைப்பது. என்தாய்மீது அவருக்கு அவ்வளவு காதல், அதனால் அவரை அதிகமாய் பிடிக்கும். அவரும்தான் என்னைப் பெற்றது. அவரின் அன்பு நெருடச் செய்வது அவரின் பார்வைகளில் இருந்து தப்ப என்னும் பொழுதுகளில்தான். சிறந்த உழைப்பாளி, மிகச்சிறந்த படைப்பாளி.

சப்தமான மௌணங்களின் கண்மையினூடே, என் ஆண்மாவை வெறித்துப் பார்க்கும் தருனங்களும், மனம் முழுதும் என்பற்றிய கனவுகள் சுமப்பதும் அவளேதான், அது அவ்வளவு எளிதல்ல. அவளுடன் வாழும் நாட்கள் பற்றி இன்றும் நினைத்துக் கொண்டேன். சென்ற நாட்களில் அவள் பற்றிய நினைவுகள் பசுமையாய் இருந்தது போல், நாளையும் அவள் பற்றிய பசுமையான நினைவுகளை என் நெஞ்சில் சுமப்பேன். அவள் பற்றிய அழகான நினைவுகள் இடை இடை நீண்டு விசாலித்துச் செல்லும் தருணங்கள் எல்லாம், மழை இடை சாரல் போலும், பனி மூடிய பாதை பொலும், இமை மூடி இருக்கமாய் அழுதுகொள்ளும் தருணங்கள்தான் அவை. என் சிந்தனைக் கோளமும், அவளின் சிந்தனைக் கோளமும் ஒன்றாய் ஒத்துப் போகவே வேண்டுகிறேன். இல்லையெனில் அங்கேயும் அதிர்வுகள் நிகழ்வதை தவிர்க்க இயலா!

என் உள்உணர்வு வெறானது அல்லது வேறொன்றால் ஆனது. உங்கள் உணர்வுகளோடு என்னால் வாழ இயலாது. என் கலாச்சாரத்தில் மூத்திரம் கழிக்க இயலாது. இல்லாதவைகளோடு புணர்தலும் இயலாது. அழகான நிலவும், நீலம் கவிந்த இருளும், மழைநால் குடையும், காற்றை ஜெயித்து விட்ட திமிருடன் பட்டம் விடும் தெருச்சிறுவனும், தெரு நாயோடு சண்டைபிடிக்கும் முதியவனும், தெருநாய் போல் அலையும் அனாதைப் பயலும் என்று என் பெருவெளியில் கொட்டிக்கிடக்கிறது என் ஆண்மா. இவ்வாறாகவே கழிகிறது என் பொழுதுகள். இவ்வாறாகவே வாழ்ந்து விட்டு செத்துப்போகிறேன் நான்.
 
-yousuf salman-

Saturday, November 7, 2009

பெருவெளி... (தொடக்கக் குறிப்பு 01)


இந்த உலகில் மனித ஆத்மாக்களாய் உயிர்ப்புடன் வாழும் உயிர்களுக்கெல்லாம் இறைவனின் சாந்தியும் அன்பும் நிலைபெற வேண்டுகிறேன்.

மனிதமும், மனிதனின் சிந்தனை எனும் பெருவெளியும், நம் கனவுகளும், கனவுகளோடு சண்டை பிடிக்கும் வாழ்வின் நிஜங்களும், அன்பின் எல்லையில்லா ரணங்களும், நாம் பயணம் பெய்யும் தொலைவுகளும் என்று, நான் உணர்ந்தவைகளை பகிர்ந்து கொள்வது என் எண்ணம்.

இந்த மரம் சினைப்பட்டு உயிர்ப்புடன் வாழும் காலமும், பெருமரமாய் வளர்ந்து நிற்கும் இடமும், வேர்களாய் மண்ணுள் புதைந்து கிடக்கும் ஈரமும் நான் எனச்சொல்வேன்.

சருகுகளாயும், செந்தளல் திண்ணும் விறகுகளாயும் மண்ணோடு மண்ணாய் மக்கிப் போவது திண்ணம். இதன் நம்பிக்கை ஒன்றே ஒன்றுதான், என் மரத்தின் பூக்கள் சினைப்பட காற்றில் நீ ஓதும் உயிர்ச் சொல்லால் எங்கோ ஒரு தொலைவினிலே மீண்டும் முளைத்தெழுவேன் அறிவாயா நீ!

-yousuf salman-