Friday, August 12, 2016

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கமல் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் இஸ்லாமிய பயங்கரவாதப் போர்

மறப்பது சமூகத்தின் பொது உடமை அதனை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பது ஒரு போராளியின் கடமை. (சேகுவேரா)
கட்டுரைச் சுருக்கம்:
“எழுதி வைத்துக் கொள் இந்த முறை அமெரிக்கத் தேர்தலில் ஹிலாரிதான் வெல்வாள்”
“மேற்கத்திய ஊடகப் போர் எந்திரம் (#WesternizedMediaWarMachine) என்கிற சொல் முதன் முதலில் என்னால்தான் பயன்படுத்தப் பட்டது என்றே கருதுகிறேன், அதற்காய் நான் தண்டிக்கப்பட்டேன்”
“ஒரு பெரும் அழிவு காத்திருக்கிறது, அது அந்த சமூகத்திற்கு தெரியுமா இல்லையா? தெரிந்தும் என்னைப் போல், உன்னைப் போல், அவனைப் போல் பல மனித அவலத்தை கடந்து போக தயாராகவே இருக்கிறது இந்தக் குருட்டுச் சமூகம்."
------------------

உலகம் மிகப்பெரும் மனித அழிவை சந்திக்கவிருக்கிறது, முன் எப்போதும் காணாத பெரும் அழிவு அது. சிறு மெழுகுவர்த்தி ஏற்றவும், ஒரு கருணை கூர்ந்த பாடல் ஒன்று பாடவும், மனம் கசிந்து கண்ணீர் விட்டளவும் தயாராகவே இருங்கள் செய்தித் தொலைகாட்சிகளின் முன்னால்.
இந்த பதிவின் கரு மிக நீண்ட நாட்களுக்கு முன்னமே தோற்றம் பெற்று விட்டது, எனினும் இதனை எழுதுவதா இல்லையா, எழுதி என்னதான் புரிந்து கொல்லப்படப் போகிறது, ஏன் இந்தச் சமூகத்திக்கு வீணாக நேரத்தை செலவு செய்வான் என்கிற பெரும் மன அழுத்தம் இதனை எழுத விடாமல் தடுத்து நின்றது. இருந்தும் தாழவே முடியாத மன அழுத்தத்தை எழுதித் தீர்த்து விடுவது என்கிற முடிவுக்கு இன்று இரவு வந்ததன் விளைவுதான் இந்த கட்டுரை. எழுதி எதையும் என்னால் மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை என்னுள் இல்லை, இருந்தும் எழுதுகிறேன்.  
கமல்காசனின் தனி ஒருவன், விஸ்வரூபம் என்கிற இரண்டு படங்களில் இருந்துதான் இந்த வெப்பிசாரம் தொடங்கிற்று. நான் ஒரு முழுத் தமிழ் சூழலில் வாழ்கிற, என் இன்பத் தமிழை உயிரென நேசிக்கிற சாதாரண சோனியின் பிள்ளைநான் என்கிறவகையில் கமலை நேசிக்கும் பலபேரில் நானும் ஒருவன். அவரின் குரலும் அவரின் செழுமையான அறிவும் என்னை அவர்பால் ஈர்க்கச் செய்தது.
இந்த இரண்டு படங்களும் தமிழ் சூழலில் ஏற்படுத்திய தாக்கம் என்பது கமலோ அல்லது அவரை வைத்து இயக்கியவர்களோ எதிர்பாக்காத அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், அது ஒரு பயத்தை என்னுள் ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் வேறு யார் இதனை எடுத்திருந்தாலும் நான் கவலை கொண்டிருக்க மாட்டேன், ஆனால் கமல்ஹாசன் என்கிற மனித நேய பற்றாளன், அதி தீவிர நியாயவான், இவரா இந்த படங்களை எடுத்தார் என்று ஒருகணம் உறைந்து பின் சுதாகரித்துக் கொண்டேன். இந்த இடம்தான் இந்த கட்டுரையின் முதல் புள்ளி.
இந்திய பெருநிலப்பரப்பின் வல்லாதிக்க கொலைகளை மறைத்து, அதனை பேச விரும்பாத, இந்திய பொதுப்புத்தியில் வளர்ந்த இந்திய தேசியத்தை உயிராக நேசிக்கும் ஒரு இந்தியன் என்று “தனி ஒருவனை” தவிர்த்தாலும், விஸ்வரூபம் என்கிற திரைப்படம் சொல்லும் செய்தி அதன் கரு மிக மிக வன்மமானது. அதன் தாக்கம் தமிழ் சூழலின் தன்மைகளை ஆட்டம் காணச்செய்தது. இவ்வளவு வன்மம் கமல் என்கிற ஒரு கலைஞ்சனுள் எப்படி வந்தது என்கிற பயமும், கூடவே சந்தேகமும் தொற்றிக் கொண்டது, இதன் மூலம் மேலாதிக்க சிந்தனைக்கு விலை போகக்கூடிய ஆளுமைகளின் தொடக்கம் மற்றைய மொழிகளில் இருப்பது போல் என் தமிழுக்கும் பிறந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். இவரைப் போல் இன்னும் பல பேர் பெரும் வன்மத்துடன் வருவார்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்.
ஒரு படிப்பாளியாய் தன்னை காட்டிக் கொள்ளும் கமல் ஆப்கானிய நிலப்பரப்பில் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் கொலைகள் பற்றி அவருக்கு தெரியாமல் போனது எப்படி? இஸ்லாம் என்கிற பெயரால், “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என்கிற பெயரால் நடக்கும் கொலைகள் அனைத்திற்கும் மூல காரணி யார் என்ரோ, அவர்களின் நிறம் என்ன என்றோ அவருக்கு தெரியாமல் போனது எப்படி? அவர் முன்னர் இருந்த கம்யூனிஸ்ட்களும், இப்போது அவர் பேரன்பு கொண்டிருக்கும் “மேற்கத்தேய அன்பு மார்க்கமான” அமேரிக்கமும் அந்த பெருநிலப்பரப்பில் செய்ய அநியாயங்கள் எல்லாம் அவர் மனட்சாட்சியை கட்டிப்போட்டதன் பின்புலன் என்ன? காந்தி செய்தால் அது சுதந்திரம், உம்மு சல்மான் செய்தால் அது தீவிரவாதமாக தவறியேனும் அவரால் கோணலாக சிந்திக்க இயலாது, அப்படி இருக்க இந்த படம் எடுப்பதன் நோக்கம் அல்லது ஆசை வேறொன்று. இந்தப் படம் அவராக துணிந்து சொல்லவில்லை என்கிற புரிதலும் ஒரு நீண்ட கொடிய அரக்கனின் நிழல் அவரின் இந்தத் திரைப்படத்தின் பின்னால் இருப்பதுவும் நமக்கு தெரிகிறது.
கமலுக்குள் இருக்கும் இயல்பான கர்வத்தை சரியாக பயன்படுத்தி, ஒரு ஆஸ்கார் என்கிற பொய்க் குதிரையை காட்டி, கமல் ஏமாற்றப்பட்டார், அவரும் ஏமாந்து போனார். கமலின் திரைக்கதை திறன் இந்திய சூழலுக்கு ஒத்துவரும் என்றாலும், அவரின் ஒட்டு மொத்த திரைக்கலைத் திறன் ஆஸ்காருக்கு போதுமானது இல்லை என்று தெரிந்தும் மேற்கின் கூலிகளால் அவருக்கு ஆசை ஊட்டப்பட்டு நஞ்சு கொடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை. இந்தியப்  பொதுவெளியில் கமல் என்கிற தவிர்க்க முடியாத கதாநாயகனை மேற்கு தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டது என்பதுதான் உண்மை. கலை என்பது பெரிய அரசியல், சினிமா என்பது கலையின் உச்சம்.
இந்தச் சூலில் இந்த விவகாரத்தினை தமிழ் சமூக ஊடகங்கள் கையாண்ட விதம் என்பது பொதுவான இந்திய இஸ்லாமிய கொலைவெறி அரசியலை விட கொஞ்சம் வீரியம் குறைந்ததுதான், காரணம் என் மொழியும், என் மக்களும் கருணை மனம் கொண்டவர்கள், இந்த நஞ்சு அந்த மண்ணில் செல்லாது என்று இந்த ஊடகங்களுக்கும் தெரியும். இருந்தும் அது கோணலாக அசைக்கப்படுகிறது.
நம்பத்தகுந்த நடுநிலையான ஊடகம் என்கிற பெயர்கொண்ட பிபிசி தமிழ் சேவை விஸ்வரூபம் என்கிற திரைப்பட விவகாரத்தை கையாண்ட விதம், அதன் செய்திப் பிரசுரம், “கருத்துச் சுதந்திரம்” என்கிற ஒரு விடயத்தில் கவனமாக குத்தி நின்றதை கவனிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன், தமிழ் சூழலில் காப்பாற்றப்பட வேண்டும் என்று கட்டமைக்கப்பட்ட விம்பமும், இஸ்லாமிய வாதிகளால் இந்த விடயங்களை கையாண்டதன் சூழலில் சரியென்றே தோன்றியது. காரணம் இஸ்லாமிய வாதிகளை இந்த விபச்சார ஊடகங்களால் குறிவைக்கப்படும்போது எவ்வாறு அதனை கையாள்வது என்ற பதட்டமான நிலையில் இந்த விவகாரம் வந்தது.
ஒரு ஊடகத்தை எவ்வாறு கவனிப்பது என்றோ, அதன் கேள்விகளை எப்படி திசை மாற்றுவது என்று அவர்களுக்கு தெரியாது (Change the Table). அதனால்தானோ என்னவோ கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்று விரும்பும் பலபேர் பிபிசி தமிழ்சேவையினை மிகவும் விரும்பினர். இதனை எதிர் கொள்வது என்கிற திறன் இஸ்லாமிய வாதிகளிடம் இல்லை, அது இன்னும் பெரும் காலம் கடந்தும் முடியாத ஒன்று. இந்த விடயங்கள் தொடர்பாக மற்றைய குடும்ப காபெரெட் பெரு செய்தி நிறுவங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. அதன் கோலங்கள்தான் உங்களுக்கு தெரியுமே.  
இதன் பிற்பாடு கருத்துச் சுதந்திரம் என்கிற பதமும் அது இஸ்லாமிய வாதிகளால் கொச்சைப்படுத்தப்படுகிறது என்கிற வாதமும் இந்திய பொதுப் புத்தியில் மிகக் கவனமாக விதைக்கப்படது. அது ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்பதுதான் உண்மை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் என்கிற கருத்தும் அது தொடர்பான செய்திகளும் இந்திய பொதுப் புத்தியில் இன்னும் சரியாக விதைக்க முடியவில்லை குறிப்பாக தமிழ் சூழலில் அது சாத்தியம் குறைவாகவே உள்ளது, இந்த ஆண்டு வந்த சென்னை வெள்ளம் அதனை அதிகமாக நீர்த்துப்போக  வைத்துவிட்டது.
இங்கு ஒரு குறிப்பு வரும் விஸ்பரூபம் பகுதி இரண்டு கமல்காசனின் “மேற்கத்தேய அன்பு மார்க்கம்” தழுவியதாக இருக்கும் அதனை கவனித்து நில்லுங்கள்.
------------------ 
#WesternizedMediaWarMachine
இப்படி இருக்கையில் கடந்த வருடத்திலிருந்து அமெரிக்க தேர்தல் ஒன்றுக்கான முஸ்தீபுகளையும், அதன் செய்திகளையும் உலக ஊடகங்களும், உள்ளூர் ஊடகங்களும் தமது நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டன. உலக ஊடகங்களில் மக்களின் காதுகளுக்கு “ட்ரம்ஸ்” “ஹிலாரி”+“கிளிண்டன்” என்கிற இரண்டு பெயர்கள் ஊடகங்கள் அனைத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது, ட்ரம்ஸ் முஸ்லிம்கலிம் அதி தீவிர எதிர்பாளன் என்கிற ஒரு கருத்தும், ஹிலாரி கிளிண்டன் மனித நேயம் முஸ்லிம்கள் மேலும் காட்டப்பட வேண்டும்!, அவர்கள் எவ்வளவு தீவிரவாதிகளாக இருந்தாலும் என்கிற ஒரு கருத்தும் திரும்பத் திரும்ப பதியவிடப்பட்டன. நவீன உலக ஒழுங்கு விதி பற்றிய ஒரு நடுநிலை பார்வையும், நவீன ஊடக கட்டமைப்பின் இருண்ட பக்கங்கள் பற்றிய ஒரு புரிதலும் கொஞ்சம் எனக்கிருக்கிறது என்கிறவகையில், அமெரிக்க தேர்தல் பற்றிய இந்த இரண்டு “தகவல்களையும்” என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
இது இன்னுமொரு பிரச்சார சதி (propogenda plot) என்று அனுமானித்திருந்தேன்.  இப்படி இருக்கையில் பிபிசி தமிழ் செய்தியிலும் மற்றைய எல்லா ஊடகங்களிலும் 2015-12-09 அன்று ஒரு செய்தி வந்திருந்தது “டொனால்ட் டிரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்’”. பிபிசியின் facebook பக்கத்தில் இதற்கு எதிராக ஒரு பின்னூட்டம் ஒன்று செய்திருந்தேன், இதற்கு பிறகு சரியாக ஒரு வாரம் கழித்து பிபிசி facebook பக்கத்தில் பின்னூட்டம் செய்ய முடியாமல் என்னை தடை செய்ந்திருந்தார்கள். இன்று வரையிலும் என்னால் பின்னூட்டம் அனுமதிக்கப்படுவதில்லை.


கருத்துச் சுதந்திரம் பேசும் அதி நவீன புத்திஜீவிகளின் ‘சிறு’பிள்ளைத்தனமான வேலையை எண்ணி நான் சிரித்துக்கொண்டேன். இதன் பின்னர் பலமுறை அவர்களை தொடர்பு கொண்டும் பயனில்லாது போய்விட்டது. இப்போது பிபிசி கட்டமைத்த கருத்துச் சுதந்திரம் என்கிற போலி விம்பத்தினை கூரருக்க வேண்டிய தேவை இப்போது எழுகிறது. காரணம் மனித இனம் கண்டிராத மிகக் குரூரமான கொலைகள் நிரம்பிய காலம் வர இருக்கிறது.
மிக இலகுவாக சொல்வதானால் பிபிசி கட்டமைக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது, “கருத்துத் திணிப்பே” தவிர வேரோன்றும் இல்லை, இன்னும் கூர்மையாக சொல்வதானால் இது கருத்து வண்புணர்ச்சி. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்யவிடு இல்லையேல் அடிபடுவாய் ஒதுங்கி நில்! என்பதன் அபாயக்குறி.
நான் இங்கு பிபிசி தமிழ் சேவை கட்டமைத்த நடுநிலை ஊடகம் என்கிற கருத்தினை உடைப்பதன் ஊடாக மற்ற உலக ஊடகப் போர் எந்திரங்களை புரிந்து கொள்ள உங்களுக்கு உதவுகிறேன். இங்கு தமிழ் நாட்டிலும், கீழத்தேய நாடுகளிலும் காபரேட் மற்றும் குடும்ப ஊடகங்களின் விபச்சார தன்மைகளை புரிந்த கொள்ளவும்.
இன்றைய சூழலில் ஊடகம் என்பது வெறும் விபச்சாரிகளின் காமக் களியாட்டங்களை விளம்பரப்படுத்தவும், அரசியல்வாதிகளின் ஊழலை, மறைமுக நிகழ்ச்சி நிரலை மறைக்கவும், காபெரேட் பெரு நிருவனங்களின் சுரண்டலை நாசுக்காக விளம்பரம் செய்யவும் பயன்படுகிறதே தவிர, வேறு சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.
மேற்கின் சிந்தனைப்  பிறழ்வை விதைக்கும் ஒரு குப்பைத்தொட்டியாக இன்று மாறிக் கிடக்கிறது உலக சேவை, மேற்கின் சிந்தனைத் தேக்க நிலைகளை  புதிய சொற்களால் அழகாக்கும் ஒரு புதிய வேலையும் தொடங்கி இருக்கிறது. இதற்கு ஒரே பாலின திருமணங்கள் போன்ற பின் நவீன அரசியலை குறிப்பிடலாம் (இந்த சொல்லை எதிர்த்து பேசினால் அவனை கொலைசெய்யக்கூட போதுமான சட்டங்கள் இன்று இயற்றப்பட்டாயிற்று).
செப்டம்பர் பதினொன்று தாக்குதலுக்கு முன்னர் இரட்டை கோபுரம் உடைக்கப்படுவது போன்ற, குறிப்பாக விமானம் மூலம் உடைக்கபடுவது போன்ற பல திரைப்படங்களும், அதிகமான கார்டூன்களும் வெளிவந்ததை குறிப்பாக சொல்ல முடியும் (இங்கு கூர்ந்து கவனிக்க, பத்து வருடத்திற்கு முதல் கார்டூன் பார்த்தவன்தான், செப்டம்பர் பதினொன்று தாக்குதலை நேரடியாக பார்த்த இளவயது அமேரிக்கர்கள்).
இவைகளை நீங்கள் ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும். அப்போது பின் லேடன் என்பது? அது செப்டம்பர் பதினொன்று சதியின் ஓர் அங்கம் என்பதை நீங்கள் பின்லேடனின் கொலையுடன் சம்பத்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தேடினால் உங்களுக்கு கிடைக்கும். உதாரணமாக அவரை யாருக்கும் தெரியாது ஆழ்கடலில் கொண்டுபோய் புதைத்த செய்தியும், ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் அடங்கலான கூட்டத்தின் CNN புகைப்படமும், பிறகு அதனை நம்பவைக்க  பிற்பாடு வெளிவந்த “Zero Dark Thirty” திரைப்படமும் உங்களுக்கு நினைவில்  வந்தாலே போதுமானது. பொய்மைக்கும் உண்மைக்கும் இடையிலான வித்தியாசம் இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையிலான வேறுபாடு போன்றது மறக்காதீர்கள்.
நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்கா தேர்தலில் வெல்வது என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது, ஹிலாரி கிளிண்டன் என்கிற பெயரை காட்டி முன்னர் எப்போதும் கண்டிராத பெரும் அழிவொன்று தயாராக உள்ளது மறந்து விடாதீர்கள்.
“ஹிலாரி ‘கிளிண்டன்’” என்கிற பெயரில் இருக்கும் கிளிண்டன் என்கிற பெயரை வைத்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் “கிளிண்டன் அறக்கட்டளை” ஒன்ரை உருவாக்கியதும், சவூதி இளவரசர் Al-Waleed bin Talal தன் சொத்துக்கள் அனைத்தையும் Bill and Melinda Gates Foundation இங்கு கொடுப்பதாக ஒப்புக்கு உடன்பட்டதும் உங்களுக்கு நினைவில் இருக்கும்.  அமெரிக்க, மேக்கத்தேய நவீன நாகரீக மக்களை உருகி உருகி  கண்ணீரில் நனைய விடும் “மேற்கத்தேய அன்பு மார்க்கம்” ஒன்று கட்டமைக்கப்படுகிறது.
கிலாரி கிளின்டன் யுகம் என்பது முன்னர் எப்போதும் பார்த்திராத மிகப்பெரும் மனித அவலத்தை அந்தச் சமூகம் சந்திக்க விருக்கிறது, அது எப்படிப்பட்ட மனித பேரழிவு என்று உங்களால் நினைத்துப் பார்கவே முடியாத அழிவு, அப்போதும் நீங்கள் விஜய் படம் பார்த்து காலக்களிப்பில் இருப்பீர்கள். இன்றைய சூழலில் சினிமா என்கிற முதன்மையான, சக்திவாய்ந்த ஊடகத்தின் முகம் இப்படி இருக்கிறது.

- யூஸுப் ஸல்மான் -

REFERENCE : https://wikispooks.com/wiki/9-11/Israel_did_it