
இருண்ட பதிவேட்டின் முதல் புள்ளி
இவ்வாருதான் ஆரம்பமாகும்
கோடிகளாய் கொட்டிக்கிடக்கும் செறிமானமற்ற கனவுகளின் ஓடை
முளைத்தௌத் துடிக்கும் ஒருஜான் விதையின் பச்சயம்
ஜன்னல் கண்ணாடியும்
பின் தாழில் தெரியும் கரு நீல ஒளியும்
அப்பால் பொழியும் ஈரமான பனிக்காற்றும்
தொண்டை நச நசக்கிறது
அழுகை வரும் போலும் உள்ளது
முழுவதும் தாழிடப்பட்ட அறையினுள்ளே
சுவரை வெறித்த வண்ணம் நான்
எது என் காலம் நான் இருப்பதா
என் ஆண்மா அப்பால் அலைவதா