Wednesday, October 5, 2011

மிகைதலின் கர்வம்


மிகைதலின் கர்வம் கொஞ்மாய்
குறைய ஆரம்பித்திருக்கிறது
மேய்ந்து, கனவுகளில் உழன்று
கழைப்படைந்து வீழ்கையில்

நினைப்பது போல் அவ்வளவு
எளிமையானதாய் இல்லை
இங்கே,
நாட்களை கடந்து செல்லுதல் என்பது

விடியும் முன்னமே தூங்கி
விழித்த முகங்களை கான்கையில்
சோர்வுடன் அயர்ந்து தூங்கி விழிக்கையில்
பகல் பன்னிரெண்டும் தாண்டி இருக்கும்
எனக்கும் அன்றைய நாள் முடிந்திருக்கும்

என் நாட்களை
என் இரவுகளின் எண்ணிக்கை கொண்டு
வாழ்தல் என்பது எவ்வளவு பெரிய ரணம்

என் மரம் கொஞ்சம்
சூழ் கொள்கிறது போலும்
அப்படியாயின் என் கனவுகள்
சினைகொள்ள காத்திருக்கிறது

பனி படியும் காலங்களில்
பூக்கல் சினை கொள்ளும்
இளவேனிக் காலம் கழித்து
என்மரம் ஆயிரம் பூக்களை பாடவிடும்

வரும் வசந்தமான காலம் பற்றி
என்பாடல் ஓங்கி அழுது ஒலிக்கும்

அப்போது நீயும் என்னுடன்
சூழ்கொண்ட கதைகள் பேசி
வரும் இறப்பின் நாள் பற்றி
மௌனமாய் காத்திரு, அதுபோதும்

-yousuf salman-
(Wednesday, 05 October 2011)

Monday, August 1, 2011

பின்னர், துயில் கலைக்கும் காலை

என் நன்பர்களின் பிரிவின் துயரில் நான் எழுதி பத்திரப்படுத்திக் கொண்ட என் நினைவுகளை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். முன்பே பழகிய சொற்களாக இருந்தபோதிலும், என் இறந்த பொழுதுகளை என்னால் இவ்வாறுதான் எழுதமுடிகிறது.

மடல் 01

ஜன்னல் கண்ணாடியும்
பின் தாழில் தெரியும் கரு நீல ஒளியும்
அப்பால் பொழியும் ஈரமான பனிக்காற்றும்

நாம் நற்பாகி, பழகித்திரிந்த நினைவுகள் இந்தப் பிரிவினிடை நீண்டு கிடக்கிறது என்னுள். இருந்தபோது இல்லாத ஏதோவொன்று என் புத்தியை குடைகிறது, நான் தவிர்த்துத் தவிக்கிறேன். செம்மணல் சாலைகளிலே என் நினைவுகள் கிடப்பதற்க்குக் காரணம், நான் என்பது என் நன்பர்களால் ஆனஉயிர் என்பதால்தான். நான் பார்த்த ஆகச்சிறந்த மனிதர்களில் நீங்களும் உள்ளீர்கள் எனக் கொள்கிறேன். ஆதலினால் சொல்கிறேன் இந்தப்பிரிவினிடை ஆண்மாவற்ற உடலாய் சிலகாலம் நான் இறந்து கிடக்கலாம்.

தாயின் முந்தானைக்கும், காதலியின் கைக்குட்டைக்கும், மனைவியின் முத்தத்திக்கும் என்று தனிப்பட்ட வாசனைகள் இருக்கும், அதனை நாம் என்றுமே அடையாளம் கண்டுகொள்வோம், அதுமாதிரி முகர்தலின் நினைவும் உங்களை ஞாபகப்படுத்தும்.

பனிபடர்ந்து கிடக்கும் காலை வேளையில் என் துயில் கலைகையில் நான் துயர்படக்கூடும் நீங்கள் இல்லாத அறைகண்டு. மாலையும் அப்படித்தான் வெறுமையான அறை பார்த்தே தனியனாய் தலையனை முகம்புதைக்கவும் கூடும். இருந்துமென்ன எல்லாமே மறணம் வரையிலும்தான். எல்லாமும் சிலகாலம்தான், வாழ்வும் மறணமும் இடையில் சிக்கிக்கிடக்கிறது நம் நட்பு, தேசாந்திர திட்சையில் பிரிவென்பது புதிதல்ல. மறைவின் பின் பதிய சூரியன் துயில்கலையும் நம் வசந்தமான எதிர்காலத்திக்காய். உங்களுக்காய் நானும் எனக்காய் நீங்களும் பிராத்தித்துக் கொள்ளுங்கள், நம் செழுமையான இந்த வாழ்வுக்காயும் மறணத்தின் பின்னரான வாழ்வுக்காயும்.

மடல் 02

நீண்டு கிடக்கிறது நம்முள் ஆன உயிர்
விசாரிப்புகள் இல்லைதாம்
வாரங்களாய் தொடர்கிறது மௌனமான பொழுதுகள்தாம்
இனி மாதங்களாயும் வருடங்களாயும் தொடரலாம்தாம்
இறந்த பொழுதுகள் மீட்டப்படும் நொடி
உங்கள் நினைவுகளும் இனி எனைக் கடத்திச் செல்லும்
அப்போது நினைவுகள் அதிர்ந்து கண்ணீரும் வரும்,
அல்லது ஒரு துளி நீர்மைக்குள் பல வருடங்களின விசாரிப்புகள் அடைபட்டு முடியும்.

அந்த அர்பமான இரவுகள்
அன்பான விசாரிப்புகள்
அசிங்கமான வரவேற்புகள்
அழகான நிராகரிப்புகள் என்று எல்லாமே என்னுள் பத்திரமாக இருக்கிறது

நன்பா! நீயும் நம்முள் ஆன நினைவின் உயிரும் நலமெனக் கொள்கிறேன்
என் பற்றிய உன்னின் நினைவுகளும் பத்திரமெனக் கொள்கிறேன்

இங்கே நான்
-உன்னின் ஸல்மான்-
(Monday, 01 August 2011)