Tuesday, December 17, 2013

காலப் பெருவெளியில் அடங்க மறுக்கும் ஓர் ஆண்மா !.. (02)

“ Remember Red
Hope is a good thing
Maybe the best of things
And no good thing ever dies “ 
The Shawshank Redemption (1994)
நினைவின் வெளியில் நான் கண்டது
செழுமையான வாழ்வு பற்றிய கனவு
என் கனவு என் ஆண்மாவில் போர்த்திக் கிடக்கும்
செழுமையான நாட்கள் பற்றியது
பசித்த
போழுதுகள் பற்றியது
என் இரவுகளில் செறிமானம் கூடி
தேடிக்கண்டடைந்தது


நான் மனிதனாய் வாழவே எண்ணினேன்
இறந்த நினைவுகளில்
நான் மனிதனாகவே வாழ்ந்தேன்
எதிர்கால நினைவுகளிலும்
மனிதனாய் வாழவே எண்ணுகிறேன் ...

Saturday, December 7, 2013

காலப் பெருவெளியில் அடங்க மறுக்கும் ஓர் ஆண்மா !.. (01)

காலடிக்கீழ் நகர்வது பூமி என்றும்
நான் சுற்றிச்சுழல்வது பேரண்டம் என்றும் அறிகிறேன்,
எனினும் என் உலகம் இங்கில்லை !..