Tuesday, November 17, 2009

கவிதை பற்றிய என் குறிப்பேட்டில் (தொடக்கக் குறிப்பு 02)

என் அந்திம காலத்தின், ஆற்றாமை கனவுகளில், சோகமாய் தேங்கிநின்ற தருணங்களில் எழுதப்பட்டவைகள்தாம் இவைகள். இவை மிகச்சிறந்த எழுத்துருவாக்கம் என்பதெல்லாம் பொய். ஆனால் அந்திமகாலத்தின் வலிகள் ஒவ்வொன்றையும் எழுத்துருவாக்கம் செய்ததின் வினை. அந்த தருணத்தில் எழுதப்பட்டவைகளை எதுவித திருத்தமும் செய்யாமல் உள்ளது உள்ளபடியே தந்திருக்கிறேன். குழந்தையின் நிர்வாணம் காமத்துக்குறியவையல்ல. கல்கொண்டு வீசியடிக்க.

அன்று நான் கிராமம் சார்ந்த நகரத்தில், மண்தின்று மழைநீர் பருகியவன்தான் மறுப்பதற்கில்லை. இன்று உடல் மூடிக்கிடந்தாலும், மனம் நிர்வாணமாய் கிடக்க வேண்டியும் தோற்றுத்தான் போகிறேன்.

1 comment:

  1. "மண்தின்று மழைநீர் பருகியவன்தான் மறுப்பதற்கில்லை."
    குழந்தையின் நிர்வாணம் காமத்துக்குறியவையல்ல. கல்கொண்டு வீசியடிக்க.

    அழகான வரிகள் .உன் படைப்புகளை நேசிப்போரில் நானும் ஒருவன் ..தொடரட்டும் உன் பயணம் ......

    என்றும் உன் நினைவுகளுடன் ,

    -அனஸ் மொஹிடீன் -

    ReplyDelete

Please add your commends