மிகைதலின் கர்வம் கொஞ்மாய்
குறைய ஆரம்பித்திருக்கிறது
மேய்ந்து, கனவுகளில் உழன்று
கழைப்படைந்து வீழ்கையில்
நினைப்பது போல் அவ்வளவு
எளிமையானதாய் இல்லை
இங்கே,
நாட்களை கடந்து செல்லுதல் என்பது
விடியும் முன்னமே தூங்கி
விழித்த முகங்களை கான்கையில்
சோர்வுடன் அயர்ந்து தூங்கி விழிக்கையில்
பகல் பன்னிரெண்டும் தாண்டி இருக்கும்
எனக்கும் அன்றைய நாள் முடிந்திருக்கும்
என் நாட்களை
என் இரவுகளின் எண்ணிக்கை கொண்டு
வாழ்தல் என்பது எவ்வளவு பெரிய ரணம்
என் மரம் கொஞ்சம்
சூழ் கொள்கிறது போலும்
அப்படியாயின் என் கனவுகள்
சினைகொள்ள காத்திருக்கிறது
பனி படியும் காலங்களில்
பூக்கல் சினை கொள்ளும்
இளவேனிக் காலம் கழித்து
என்மரம் ஆயிரம் பூக்களை பாடவிடும்
வரும் வசந்தமான காலம் பற்றி
என்பாடல் ஓங்கி அழுது ஒலிக்கும்
அப்போது நீயும் என்னுடன்
சூழ்கொண்ட கதைகள் பேசி
வரும் இறப்பின் நாள் பற்றி
மௌனமாய் காத்திரு, அதுபோதும்
-yousuf salman-
(Wednesday, 05 October 2011)
(Wednesday, 05 October 2011)
சார் இது உங்களின் படைப்பாக இருந்தால் சந்தோசம், ஆனாலும் இதே சாயலில் ஒரு கவிதை பகுதினை இந்திய எழுத்தாளர் ஒருவரின் வலையமைப்பில் காண முடிந்தது, சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
ReplyDeleteநன்றி
மாகிர்
கனம் ஜயா!
ReplyDeleteநான் எந்த பதிவையும் காபி பன்னவோ பிரதி எடுக்கவோ இல்லை என் நம்பிக்கை முழுவதுமாய் என் ஆண்மா பற்றியே சூழ உள்ளது ஜயா, இருந்தும் சிலபிரதிகளில் சில ஆழுமைகள் என்னுள் தாக்கம் செலுத்தும், அது கவிதைக்கு மட்டுமே உரிய மொழியல்ல! நான் நீங்கள் பேசும் அத்தனையும் ஏதோவொன்றின் தழுவலாக இருக்கும், இதனை தவிர்பது மிகைதலின் கர்வமாக இருக்கலாம், இதில் கவனிக்கப்பட வேண்டியவொன்றிருக்கிறது, ஏதோவொரு தெருக்கோடியில் வசிக்கும் என் ஆண்மாவும் இன்னுமொறு கோடியில் வசிக்கும் அவனின் ஆண்மாவும் ஒன்றின் மீதான வலியை உணர்ந்து அதனை மொழியுருவாக்கம் செய்தலும் ஒத்திருக்கிறது என்பது எவ்வழவு பெரிய தழுவல் இதனை நான் ஆச்சரியமாகவே பார்க்கிறேன், அதனை நானும் கான விழைகிறேன். தயவு செய்து அந்த பிரதியின் இணைப்பை இங்கு இணைக்கவும்