ஒரு தாயின் வெறுமையான உருவம் பற்றி
நீ என்ன நினைக்கிறாய்
அவள் மௌனமாய் வெறுப்பை அமிழ்ந்து
உணவு உண்ணும் அந்த நொடி பற்றி
கனவுகளைத் தேடியே தொலைந்து போன காலங்கள் பற்றி
வெறுமையாய் காலங்களோடு புணர்ந்து கண்விழித்த இரவுகள் பற்றி
நீ என்ன நினைக்கிறாய்
இந்த அமைதியான பொழுதுகள் பற்றி
அபத்தங்களே நிறைந்த இந்த வாழ்வு பற்றி
உன்னிடம் சொல்ல வேண்டும்
மேல்திசை நோக்கிப் பறக்கும் பறவைகள்
எவ்வளவு அற்புதங்களை கானும் இப்போது
றம்மியமான குளிரும், நிலவும், இருளும்
பின்னர் பனி போர்திய காலை விடியல்
வாழ்வின் வலி
தீராது இத்துயர்
கனவுகளை அடைதல் தவிர எனக்கொன்றும் இல்லாதினி
கனவுகளை அடைதல்
அல்லது இப்படியே வலியோடு அலைதல்
எங்கிருந்தும் தொடங்களாம் உயிரின் விதை
-yousuf salman-
(Wednesday, 08 February 2012)
No comments:
Post a Comment
Please add your commends