Tuesday, May 8, 2012

நான் மனிதனாய் வாழ்வதேயில்லை


ஆயிரத்து எட்டாவத தடவையாக இருக்கலாம்
ஆண்மாவற்ற எனதெல்லைகள் உடைபட உடைபட
நான் உடைபட்டு அழுவது

பசி, உணவு என்று மட்டுமே
அலையும் வாழ்வாயிற்று இன்று
என் பருவகால கனவுகள் ஆதிகால நினைவுகள் ஆயிற்று

பெரும் வலிகளின் பிற்பாடும்
ஒரு பெரும் கருணையின் பிற்பாடும்
நான் மனிதனாய் வாழ்வதேயில்லை

என் வெற்றிகள் என் தோழ்விகள்
என்னை ஒன்றுமே செய்கிறதில்லை

ஒரு ஜடப்பொருளின் நிழலாய்
நான் மாறியிருக்கிறேன்
என் நிழல் என்றுமே கரைவதுமில்லை அழிவதுமில்லை

வாழ்வு பற்றி எண்ணிக் கொள்ள என்னதான் இருக்கிறது
பசியும் அரவமான கேவலும் தவிர

பால்ய காலத்து காதல் அறியேன்
அதன் பிற்பாடு எதுவுமே அறியேன்
எத்தனை இளப்புகள் நிகழ்தன
நான் இளந்தவை பற்றி அறியேன்
உடைந்து உடைந்து அழுவது தவிர
நான் வேறொன்றும் அறியேன்

இன்றுடன் ஆயிரத்து எட்டாவத தடவையாக இருக்கலாம்
நான் இப்படி அழுவது

-Yousuf Salman-
(Tuesday, 08 May 2012)

5 comments:

  1. எனக்காக எழுத்தப்பட்ட கவிதைபோலுள்ளது உங்கள் கவிதை. மிகவும் மிகவும் ரசித்தேன்.
    நேரமிருந்தால் என் இணையத்தளத்தையும் பாருங்கள்.
    visaran.blogspot.com

    ReplyDelete
  2. உங்களின் மறுமொழிக்கு நன்றி. உங்களை எப்படி விளிப்பது என்று விளங்கவில்லை, விசரன் என்று விளிப்பது அநாகரிகமாக இருக்கும் என தோன்றுகிறது. உங்களின் வலைப்பதிவும், எழுத்து மொழியும் நன்றாகவே உள்ளது.

    ReplyDelete
  3. இதக்கு பின்னால் ஏதும் காரணங்கள் இருக்கிறதா?

    ReplyDelete
  4. PAAVAN AVAN THOONKITTAN!!!

    ReplyDelete
  5. உங்களின் மறுமொழிக்கு நன்றி.

    "பெரும் வலிகளின் பிற்பாடும்
    ஒரு பெரும் கருணையின் பிற்பாடும்
    நான் மனிதனாய் வாழ்வதேயில்லை"

    ReplyDelete

Please add your commends