Saturday, December 4, 2010

இருத்தலின் அலைக்களிப்பு

இச்சை பிய்த்தொழுகிறது இன்னாட்களில்
இழுத்தென்னை தாழா துயரின் முடிவில்
அலைக்களிக்கிறது என் வாழ்வு
வாழ்வும் துயரும் ஒரே புள்ளிக் கோளத்தில்
மோதி முட்டி பெயர்கிறது

நிம்மதியாய் ஒருநாள்தனையேனும் இல்லைதான்
பாலைநில சுடுகாற்றும் பனியுறைவும்
வெப்பிசாரம் கொள்ளவைக்கிறதுதான்
நடுநிசியில் பாடலொன்று கேட்டும்
சாலையோர பூக்கள் நுகர்ந்தும்
மாலைநேர வெய்யில் பார்த்தும்
உன்னோடு நான் கதைத்தும்
வெகுநாட்கள் ஆகுகிறதுதான்

உன் முந்தானையின் வாசனைக்கு
இவை எதுவும் ஈடுஇலா
இங்கொனார்ந்தரும் ரொட்டியும் கோழியும்
உன் கைப்பிடி சோற்றுக்கு ஈடுஇலா
ஒற்றையாய் கழியும் இன்னாட்கள் பற்றி
சொல்லி மாழவொனா

எல்லாம் கிடக்கட்டும்
அனுப்பிய பணம் உன் கையில் கிடைத்ததா
அது போதாதென்று தெரியும் எனக்கு
என்ன நான் செய்ய
செல்லாத ஜந்து நாட்களுக்கு
பத்து நாட்கள் பிடித்துவிட்டார்கள் சம்பளத்தில்
உன் நினைவின் துயர் தாங்கவே இயலாமல்
நான் எதுவும் செய்ய முடியாமல்
உன் இறப்பின் துயர் துடைத்த நாட்கள் அவை
அது விளங்குமோ உனக்கு நானறியேன்

வார்தைகளில் உயிர் குறைந்துவிட்டது பார்
அது இது என்று எழுதுகிறேன்
அதற்காய் கோபித்துக் கொள்ளாதே
இன்னும் முழுவதுமாய் செத்துவிடவில்லை உயிர்
உன்னில் நின்ற நினைவும்
உன் மீதான அன்பும் மீதமாய் உள்ளது என்னில்
என் இறப்பென்றால் உன் நினைவுகள் அழிவதுதான்
முழைகொள்ளக் காத்திருக்கிறது சூல்
இது போதாதா வாழ்வை பசுமையாக்க

-yousuf salman-
(Saturday, 04 December 2010)

1 comment:

  1. இதை பார்த்தால் வேலையில் கொண்ஸ்சன்றேசன் இல்லை போல் தெரிகிறது. நினைவெல்லாம் அங்கேதான் இருக்கிறது. அதற்காக அடுத்த மாத சம்பளத்தில் இருபது நாட்கள் வெட்டுவதாக தீர்மானித்துள்ளோம்.

    ReplyDelete

Please add your commends