Friday, May 19, 2017

தொடரும் பனிக்காலம்

வசந்தகாலம் முடிந்து மரத்தின் இலைகள் எல்லாம் சருகுகளான பின்னர்
வீட்டின் கூரையில் மூடிக்கிடக்கிறது காய்ந்த சருகுகள்

இலையுதிர் காலம் முடிந்து பனிக்காலம் துவங்கிற்று

பனிக்காலத்தில் நான் முன்னரே இருந்திருக்கிறேன்
வெண்மையான சாலை
வெண்மையாக எல்லாமும்

இந்தப் பனிக்காலம்
வெண்மையாக இல்லை
கருப்பாகவும் இல்லை
இடையில் ஒரு நிறம்

நாட்கள் நீண்டு மிக நீண்டு அமைதியாக கிடக்கிறது
பேச்சுத் துணையற்ற அறவமான இரவொன்று  
இரவு கழித்து நீல நிறம் இல்லாத விடியல்
பகலின் பின்னரான மஞ்சள் நிறமும் இல்லை
பனியின் வெண்ணிறமும் இல்லை
இருளின் கருத்த நிறமும் இல்லை

இவைகள் எல்லாவற்றுக்கும் இடையில் ஒரு நிறம்
அதுதான் இப்போதைக்கு நான் எனும் அகம்

வசந்தகாலம் வருவதற்கு முன்னர் இன்னும் நிறையக் காலம் இருக்கிறது
இது பனிக்காலம் ஆதலால் வருங்காலம் உறைபனிக்காலம்

அடர்த்தியான பனி கொட்டித்தீர்க்கிறது
பனிக்கால ஊளைக் காற்றின் சத்தம் நெஞ்சை பிளக்கிறது
கூரையின் மேல் சருகுகள், அதன் மேல் கொட்டும் பனி
வீடும் என் அறையும் உறைந்து நிட்கிறது  

நான் அறையின் உள்ளே நிட்கிறேன் 

No comments:

Post a Comment

Please add your commends